இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல் - அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
chennai
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
TAGGED:
rain update in tamilnadu