தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 15, 2021, 2:26 PM IST

Updated : Nov 15, 2021, 5:28 PM IST

ETV Bharat / state

சென்னை மக்களுக்கு எச்சரிக்கை: மீண்டும் வருகிறது கனமழை

சென்னையில் வருகின்ற 17, 18 தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை மக்களுக்கு எச்சரிக்கை
சென்னை மக்களுக்கு எச்சரிக்கை

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் (Regional Meteorological Centre) இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் (deputy director general balachandran) செய்தியாளரை இன்று (நவம்பர் 15) சந்தித்தார். அப்போது, "தென்கிழக்கு அரபிக்கடலிலிருந்து வட கேரளா, தெற்கு கர்நாடகா - வட தமிழ்நாடு வழியாக தென்மேற்கு வங்கக்கடல் வரை (4.5 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் காற்றின் திசை மாறும் பகுதி காரணமாக இன்று தமிழ்நாடு - புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், கரூர், திருச்சி, பெரம்பலூர் - புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு - புதுவை, காரைக்கால் பகுதிகளில் நாளை (நவம்பர் 16) அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 17, 18

தமிழ்நாடு - புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்கள் - புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 19

தமிழ்நாடு - புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட மாவட்டங்கள் - புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

வடக்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று நவம்பர் 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா, வட தமிழ்நாட்டை நெருங்கும் என்றும் நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். மேலும் வருகின்ற 17, 18 தேதிகளில் சென்னையில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை இதுவரை 44 செ.மீ. பதிவாகியுள்ளது. ஆனால் இயல்பு 28 செ.மீ. இயல்பைவிட 54 விழுக்காடு அதிகமாக மழை பெய்துள்ளது.

சென்னையில் 81 செ.மீ. இதுவரை பெய்துள்ளது. 48 செ.மீ. இயல்பு, 69 விழுக்காடு அதிகமாக மழை பெய்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் 28 செ.மீ. அதிகம் மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்கக்கடல் பகுதிகள்

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மத்திய அந்தமான் கடற்பகுதியில் நிலவுகிறது.

நவம்பர் 15: மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நவம்பர் 17, 19: மத்திய மேற்கு, அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா, வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்

நவம்பர் 15: கேரள கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நவம்பர் 16, 17: கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன்

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு

வளவனூர் 12 செ.மீ., களியல், கோலியனூர் தலா 10 செ.மீ., ஜமுனாமரத்தூர், லால்பேட்டை, புத்தன் அணை தலா 8 செ.மீ., வேப்பூர், வெம்பாக்கம், சுருளக்கோடு, பெருஞ்சாணி அணை, பேச்சிப்பாறை, விழுப்புரம், சிவலோகம் தலா 7 செ.மீ., மஞ்சளாறு, சிற்றார், கே.எம். கோயில், கள்ளக்குறிச்சி தலா 6 செ.மீ., ஜெயம்கொண்டம், விராலிமலை, வானூர், சோலையார், பாடலூர், தென்பரநாடு, சத்யபாமா பல்கலைக்கழகம் தலா 5 செ.மீ., வம்பன், சிறுகுமணி, குழித்துறை, பையூர், வாலாஜா, நெடுங்கல், பண்ருட்டி, இரணியல், அன்னவாசல், கொரட்டூர், சின்னக்கல்லார் தலா 4 செ.மீ. பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: ரயில் பயண பிரியர்களுக்கு ஒரு இனிய செய்தி - கட்டணமும் குறையுது மக்களே!

Last Updated : Nov 15, 2021, 5:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details