சென்னை: தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் சாலைவிதி மீறல்களுக்கான புதிய அபராதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி அவசரகால தேவைக்காக செல்லும் ஆம்பூலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட வாகனங்களுக்கு வழிவிட மறுத்தால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்புலன்சுக்கு வழிவிட மறுத்தால் அபராதம் - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு - தீயணைப்பு வாகனம்
சாலைகளில் செல்லும் போது ஆம்பூலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிட மறுத்தால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தேவையில்லாமல் தடை செய்யப்பட்ட இடங்களில், ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும், விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் அபாயகரமாக வாகனத்தை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன பந்தயங்களில் ஈடுபட்டால் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும், மாசு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கினால் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணைகள் அனைத்தும் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருகின்றன.