தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனுவை தாமாக முன்வந்து விசாரிக்க முடியாது' - தாமாக முன்வந்து வழக்காக விசாரிக்க முடியாது

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில், பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தாமாக முன்வந்து வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத்தெரிவித்தது.

Refuse
Refuse

By

Published : Oct 12, 2022, 1:51 PM IST

சென்னை: கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி அவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென வழக்கறிஞர் பி. ரத்தினம் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டு தலைமை நீதிபதிக்கு கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் ஜாமீன் வழங்கியது ஏற்கத்தக்கது அல்ல என்றும், விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் மாணவி தற்கொலைதான் செய்து கொண்டார் என்ற தனி நீதிபதி கருத்தும் ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்த கடிதம் குறித்து பொறுப்புத்தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் ரத்தினம் முறையீடு செய்தார். தங்கள் கோரிக்கை மனுவை தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டுமென்றும், பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

ஆனால், நீதிபதிகள், ஆயிரக்கணக்கான கோரிக்கை மனுக்கள் உள்ளதாக குறிப்பிட்டதுடன், அவற்றை வழக்காக விசாரிக்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தனர். கனியாமூர் பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரியதையும், தாமாக முன் வந்து வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதிகள், கோரிக்கை மனுவை கவனத்தில் எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக்கில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை சோதனை அடிப்படையில் அமல்படுத்த உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details