தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஷங்கர் படங்களை இயக்க தடைவிதிக்க முடியாது - உயர் நீதிமன்றம் - Indian 2 movie produced by Lyca

இந்தியன் 2 படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் இயக்குநர் ஷங்கர் பிற படங்களை இயக்க இடைக்காலத் தடைவிதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Refuse to stay director sankar make other film, notice served, MHC
Refuse to stay director sankar make other film, notice served, MHC

By

Published : Apr 1, 2021, 12:36 PM IST

சென்னை: லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் கமல் ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தை ஷங்கர் இயக்கிவருகிறார். இந்நிலையில் லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், தங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குநர் ஷங்கருக்குத் தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.

படத்திற்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், அதைத் தாண்டி 236 கோடி ரூபாய் வரை செலவு செய்து இருப்பதாகவும், ஆனாலும் 80 விழுக்காடு பணிகள் மட்டுமே முடிந்திருப்பதாகும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியன் 2 படத்தின் மீதமுள்ள பகுதிகளை முடித்துத் தர வேண்டுமென இயக்குநர் ஷங்கருக்கு உத்தரவிடவும் கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசிய நிலையில் இதுவரை 14 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும் லைகாவின் மனுவில் தெரிவிக்கப்பட்டு மீதமுள்ள 26 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்புத்தொகையாகச் செலுத்தவும் தயாராக இருப்பதாகவும் மனுவில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி பி.டி. ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, இயக்குநர் ஷங்கரின் விளக்கத்தைக் கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, பிற படங்களை இயக்கக் கூடாது என ஷங்கருக்கு இடைக்காலத் தடைவிதிக்க மறுத்துவிட்டார்.

மேலும், வழக்கு குறித்து இயக்குநர் ஷங்கர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details