சென்னை புரசைவாக்கம் வடமலை தெருவில் வசித்துவருபவர் லலித் புகார்( 42). இவர் சொந்தமாக அதேபகுதியில் குளிர்சாதன பெட்டிகள் தயாரிப்புக்கான உதிரி பாக கிடங்கை நடத்தி வருகிறார். உதிரி பாகங்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் இன்று(நவ.10) காலை மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அறைக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் கொடுத்தனர்.
அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து, கிடங்கில் ஏற்பட்டிருந்த தீயை தண்ணீரை அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.