நாடு முழுவதும் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அரசு விடுமுறை நாள் என்பதால் நாளை (மே14) சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி இயக்கப்படும் என தென்னக ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை கடற்கரை - வேளச்சேரி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை ஆகிய வழித்தடங்களில் குறைவான ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மின்சார ரயில்கள் குறைப்பு - local train
சென்னை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை குறைவான அளவில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

reduction-of-electric-trains-ahead-of-ramzan