தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ. 10 குறைக்க வேண்டும் - முகவர்கள் கோரிக்கை - Reduce milk sales by up to Rs 10 per liter

சென்னை: பால் விற்பனை விலையை லிட்டருக்கு 10 ரூபாய் வரை குறைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் பால் முகவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பால் முகவர்கள் கோரிக்கை
பால் முகவர்கள் கோரிக்கை

By

Published : May 24, 2020, 7:46 PM IST

தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் இணையதள ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

அப்போது மாநில தலைவர் பொன்னுசாமி பேசுகையில், "2020 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பால் கொள்முதல் விலை உயர்வு என்கிற பொய்யான காரணத்தை கூறி பால் விற்பனை விலையை லிட்டருக்கு 6 ரூபாய்க்கு மேல் தனியார் பால் நிறுவனங்கள் உயர்த்தியது.

தற்போது பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 15 ரூபாய்க்கு மேலும் குறைத்துள்ள நிலையில் அதன் பலனை பொதுமக்களுக்கு வழங்கிடாமல் ஏமாற்றி வருகிறது. உடனடியாக பால் விற்பனை விலையை லிட்டருக்கு 10 ரூபாய் வரை குறைக்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துள்ள பால் முகவர்களுக்கு கரோனா நிவாரணமாக இரண்டாயிரம் ரூபாய் வழங்க வேண்டும்" என அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க:34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின் சாதனை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details