சென்னை:JN சினிமாஸ் என்ற படநிறுவனம் சார்பில் J.பார்த்தசாரதி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் 'ரெட் சாண்டல் உட்' இந்த படத்தில் வெற்றி நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தியா மயூரிக்கா நடித்துள்ளார். மற்றும் கேஜிஎப் ராம், எம்.எஸ்.பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராமன், மாரிமுத்து, கபாலி விஷ்வந்த், ரவி வெங்கட்ராமன், மெட்ராஸ் வினோத், வினோத் சாகர், பாய்ஸ் ராஜன், லட்சுமி நாராயணன், சைதன்யா, விஜி, அபி, கர்ணன் ஜானகி மற்றும் பலர் நடித்து உள்ளனர்.
இவர்களுடன் தயாரிப்பாளர் J.பார்த்தசாரதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாம் இசை அமைத்துள்ளார். படம் பற்றி இயக்குனர் குரு ராமானுஜம் கூறும்போது, "இந்த கதை 2015இல் தமிழகத்தின் ஜவ்வாது மலை, படவேடு மலைப் பிரதேசங்களில் இருந்து ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட போனதாக சொல்லி திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர வனத்துறையினரால் 20 தமிழர்களை சுட்டு கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது.
படத்தில் நாயகன் வெற்றி கதாநாயகியின் அண்ணனான கருணாகரன் என்னும் நபரை தேடி ரேணிகுண்டாவிற்கு செல்கிறார். அங்கு வெற்றி செம்மரம் கடத்த வந்திருப்பதாக சொல்லி வனத்துறையினரால் கைது செய்யப்படுகிறார். அவருடன் இணைந்து இன்னும் சில தமிழர்களை கைது செய்து இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்கிறான் வெற்றி.