தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னைக்கு ரெட் அலர்ட்: மீண்டும் திரும்புகிறதா 2015 ? - குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் மக்கள் அவதி

வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நீடிப்பதால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில், குறிப்பாக வடக்கு மற்றும் மத்திய சென்னைப் பகுதிகளில் அதிக மழைப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னைக்கு ரெட் அலர்ட்
சென்னைக்கு ரெட் அலர்ட்

By

Published : Nov 7, 2021, 11:21 AM IST

Updated : Nov 7, 2021, 11:30 AM IST

சென்னை: வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று (நவ.6) இரவு தொடங்கிய மழை விடிய விடியக் கொட்டித் தீர்த்தது.

இதனால் சாலைகள், குடியிருப்புகள் வெள்ள நீர் சூழ்ந்து காணப்பட்டது. விடாமல் பெய்து வரும் கனமழை மேலும் மூன்று மணி நேரத்திற்குத் தொடரும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2015-க்கு பிறகு மீண்டும் கனமழை

2015-க்கு பிறகு மீண்டும் கனமழை

இதுவரை அதிகபட்சமாகச் சென்னை காவல்துறைத் தலைவர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் 226.80 மி.மீ, அம்பத்தூர் 205 மி.மீ , நுங்கம்பாக்கத்தில் 158.90 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது. 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில், குறிப்பாக வடக்கு மற்றும் மத்திய சென்னைப் பகுதிகளில் அதிக மழைப் பதிவாகியுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (நவ. 7) பிற்பகல் 1.30 மணிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது.

குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் மக்கள் அவதி

இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் அருகில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் நிவாரண மையங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உதவி எண்

நிவாரண மையங்கள் தொடர்பான விவரங்களைத் தெரிந்துகொள்ளவும், மழைநீர் தேக்கம் மற்றும் இதர இடர்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்கவும், 1913,044-25619206,044-25619207,044- 25619208 ஆகிய தொலைப்பேசி எண்களிலும், 94454 77205 என்ற எண்ணிற்கு வாட்ஸாப் மூலமாகத் தொடர்பு கொள்ளுமாறும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மீண்டும் கனமழை

சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த கனமழையின் போது செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட சமயத்தில் தென் சென்னையில் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டது. அது போன்ற பாதிப்புகள் மீண்டும் ஏற்படாத வண்ணம் அனைத்து பணிகளையும் சென்னை மாநகராட்சி செய்துள்ளது.

பேரிடர் மீட்புப் படை

திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் கனமழை: குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் மக்கள் அவதி

Last Updated : Nov 7, 2021, 11:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details