சென்னை:தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் இன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதற்காக சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, புதுக்கோட்டை உள்ளிட்ட 35 மாவட்டங்களில் இருந்து 295 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு சுமார் 3.66 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இதில், 2லட்சத்து 99ஆயிரத்து 887 பேர் ஆண்கள், 66,811 பேர் பெண்கள், 59 பேர் மூன்றாம் பாலினத்தவர் என தேர்வை எழுதினர்.
விண்ணப்பித்த 3.66 லட்சம் பேரில் 67 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது. எழுத்துத் தேர்வில் 15ஆயிரத்து 158 ஆண்கள் மற்றும் 3ஆயிரத்து 513 பெண்கள் என மொத்தம் 18ஆயிரத்து 671 தேர்ச்சிப் பெற்றனர். இந்த நிலையில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற நபர்களுக்கு அடுத்தகட்டமாக தமிழ்நாடு முழுவதும் இன்று உடல்தகுதி தேர்வு நடைபெற்றது. சென்னையில் முதற்கட்டமாக இன்று 350 நபர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.