கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. இருப்பினும், சிறப்பான மருத்துவ கட்டமைப்பின் விளைவாக குணமடைவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. குறிப்பாக, சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட மண்டலங்களில் அதிகபட்சமாக தண்டையார்பேட்டையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 92 விழுக்காடாக உள்ளது. இந்த எண்ணிக்கை, அம்பத்தூரில் குறைவாக உள்ளது.
- திருவெற்றியூர் - 90%
- மணலி - 92%
- மாதவரம் - 85%
- தண்டையார்பேட்டை - 92%
- ராயபுரம் - 91%
- திரு.வி.க நகர் - 90%
- அம்பத்தூர் - 79%
- அண்ணாநகர் - 89%
- தேனாம்பேட்டை - 91%
- கோடம்பாக்கம் - 88%
- வளசரவாக்கம் - 85%
- ஆலந்தூர் - 84%
- அடையாறு - 86%
- பெருங்குடி - 85%
- சோழிங்கநல்லூர் - 84%