சென்னை:தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களின் உரிமை ஆவண விவரங்களை இணையதளத்தில் வெளியிடவேண்டும், அது தமிழில் வெளியிடவேண்டும். மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் மாவட்ட வக்பு ஆய்வாளர், கண்காணிப்பாளர் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டதில் பல்வேறு தவறுகள் நடந்துள்ளதாக சட்டப்பேரவையில் இன்று (செப்.6) கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்து பேசிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், "தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 53 ஆயிரத்து 478 வக்பு சொத்துகள் அனைத்தும் இணையதளத்தில் வெளிப்படைத்தன்மையோடு, உரிமை ஆவண விவரங்களோடு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அது ஆங்கிலத்தில் இருப்பதால் தமிழில் மாற்றி பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதுவரை ரூ. 23 கோடி சொத்துக்கள் மீட்பு