சென்னை:மெரினா கடற்கரைப் பகுதியில் இன்று (ஜூலை.18) காலை வழக்கம் போல் சிலர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள நீச்சல்குளத்தின் பின்புறம் உள்ள கடற்கரை மணற்பரப்பில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையின் சடலம் ஒன்று கரை ஒதுங்கி இருந்ததைக் கண்டு நடைபயிற்சி செய்தவர்கள் அதிர்ந்தனர்.
மெரினா கடற்கரையில் பெண் குழந்தையின் சடலம் மீட்பு - corpse of a baby born Recovery
மெரினா கடற்கரையில் பிறந்து சில நாள்களேயான பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
![மெரினா கடற்கரையில் பெண் குழந்தையின் சடலம் மீட்பு girl baby born corpse](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12495484-thumbnail-3x2-yua.jpg)
பெண் குழந்தை சடலம் மீட்பு
இது குறித்து அண்ணா சதுக்கம் காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு விரைந்த காவல் துறையினர் இறந்து கிடந்த குழந்தையின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக ஓமந்தூரார் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: குறும்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டிய கணவன் - மனைவி தற்கொலை