தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழமையான விநாயகர் சிலை மீட்பு - சென்னை மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் 400 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலையை சென்னை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

பழமையான வித்திய விநாயகர் சிலை மீட்பு
பழமையான வித்திய விநாயகர் சிலை மீட்பு

By

Published : Nov 3, 2021, 4:48 PM IST

சென்னை: காஞ்சிபுரத்தில் விநாயகர் சிலையை கடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நடனமாடும் வடிவத்தில் இருக்கக்கூடிய விநாயகர் சிலையை சென்னை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

விநாயகர் சிலை மீட்பு

இந்த சிலை 130 கிலோ எடையும், 5.25 அடி உயரமும் கொண்டது. சென்னையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு இந்த சிலையை கடத்தி அங்கிருந்து வெளிநாட்டிற்கு விற்பதற்கு சிலர் திட்டமிட்டிருந்தனர். தற்போது இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை சுங்கத்துறை அலுவலர்கள் தேடி வருகின்றனர்.

400 ஆண்டுகள் பழமையான சிலை

இதுவரை சென்னை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்த சிலைகளிலேயே இதுதான் அதிக உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஐடி ஊழியர் உயிரிழப்பு: டெலிகாம் கம்பெனி மீது மாநில நெடுஞ்சாலை துறை புகார்

ABOUT THE AUTHOR

...view details