தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஷாருக்கானின் 'ஜவான்' பட ஆடியோ உரிமையைத் தட்டி தூக்கிய நிறுவனம் - இவ்வளவு ரேட்டா? - சானியா மல்கோத்ரா

அட்லி இயக்கத்தில் ஷாருக்கானின் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தின் ஆடியோ உரிமையை டி-சிரீஸ் நிறுவனம் 36 கோடி ரூபாய்க்கு கைப்பற்றி இருக்கிறது.

ஜவான்
jawan

By

Published : Jul 1, 2023, 1:05 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர், இயக்குநர் அட்லி. இவர் ராஜா ராணி என்ற வெற்றிப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்பு நடிகர் விஜய்யை வைத்து இயக்க வாய்ப்பு கிடைத்தது. விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்தார். தற்போது பாலிவுட் நடிகரான ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி பிரியா மணி, சானியா மல்கோத்ரா, யோகி பாபு உள்படப் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். மேலும் இந்தப் படத்தில் சஞ்சய் தத், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் கவுரவ வேடத்தில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இதையும் படிங்க:உலகளவில் ‘போர் தொழில்’ பட வசூல் எவ்வளவு? - விநியோகஸ்தர் சக்திவேலன் தகவல்!

'ஜவான்' திரைப்படம் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான பேரரசு படத்தின் ரீமேக் என தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி பாரதிராஜா இயக்கத்தில், கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெற்றிபெற்ற ’ஒரு கைதியின் டைரி’ படத்தின் தழுவல் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தின் ஆடியோ உரிமையை டி-சிரீஸ் நிறுவனம் 36 கோடி ரூபாய்க்கு கைப்பற்றி இருக்கிறது. இது புதிய சாதனை என்று கூறப்படுகிறது. 'ஜவான்' படத்தின் இசை உரிமையைப் பெற பல முன்னணி நிறுவனங்கள் போட்டியிட்டது. இதில் டி- சிரீஸ் நிறுவனம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகையைச் செலுத்தி, இப்படத்தின் ஆடியோ உரிமையைக் பெற்றிருக்கிறது.

இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏற்கனவே திரையுலக ஆர்வலர்களிடத்தில் அதிகரித்திருக்கும் நிலையில் இப்படத்தில் ஆடியோ உரிமை குறித்த ஒப்பந்த விலை பேசும் பொருளாக மாறி இருக்கிறது. ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோரின் திறமையும், அட்லியின் நேர்த்தியான இயக்கத்தையும் இணைத்து 'ஜவான்' அற்புதமான படைப்பாக தயாராகி இருக்கிறது. உணர்வுப்பூர்வமான ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதியன்று வெளியாகிறது. ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:Maamannan Box Office: வெளியான முதல் நாளே வசூலை வாரிக் குவித்த மாமன்னன்

ABOUT THE AUTHOR

...view details