தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின்கீழ் ஏரிகள் புனரமைப்பு - தமிழ்நாடு பாசன வேளாண்மை

சென்னை: தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின்கீழ் ஏரிகள் புனரமைப்பு, புதிய அணைக்கட்டுகள், நிலத்தடி நீர் செறிவூட்டும் பணிகளுக்கு 650 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்திள்ளது.

reconstruction-of-lakes

By

Published : Nov 21, 2019, 6:02 PM IST

தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின்கீழ் கடந்த 2017 முதல் 4 ஆயிரத்து 708 ஏரிகள் புனரமைக்கவும், 477 அணைகட்டுகள் புதிதாக கட்டவும் தீர்மானிக்கப்பட்டு 2 ஆயிரத்து 131 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்தை 7 ஆண்டுகளுக்குள் 4 கட்டங்களாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

முதற்கட்டமாக 780 கோடி மதிப்பில் ஆயிரத்து 200 ஏரிகள் சீரமைக்கப்பட்டு, 30 நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக சென்னை, திருச்சி, மதுரை மண்டலங்களில் உள்ள 1 லட்சத்து 54 ஆயிரத்து 913 ஹெக்டேர் பாசன பரப்பு பயன்பெறும் வகையில் 57 தொகுப்பு பணிகள் செய்ய 650 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மண்டலத்தில் 312 கோடி செலவில் 26 தொகுப்பு பணிகளும், திருச்சி மண்டலத்தில் 177 கோடி செலவில் 23 தொகுப்பு பணிகளும், மதுரை மண்டலத்தில் 159 கோடி செலவில் 8 தொகுப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. ஏரிகளை புனரமைத்தல், புதிய அணைகட்டுகள் கட்டுதல், நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதையும் படிக்க: கடலாடிகளின் போராட்டங்கள் நெஞ்சுரத்தைத் தருபவை - இன்று உலக மீனவர்கள் தினம்!

ABOUT THE AUTHOR

...view details