சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, "தமிழ்நாட்டில் 2020ஆம் ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து நீர் குறித்த நேரத்தில் திறக்கப்பட்டதை அடுத்து நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதுவரை 2 லட்சத்து 37 ஆயிரத்து மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த திமுக ஆட்சியில் ஒப்பிடும்போது 10 மடங்கு கூடுதல். விவசாயிகளிடம் நாளொன்றுக்கு 6 லட்சம் நெல் மூட்டைகள் என 2,135 கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும்.
நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரியக்கூடிய கடைநிலை ஊழியர் முதல் உயர்மட்ட அலுவலர்கள் வரை அனைவரும் விடுமுறை இல்லாமல் விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர். இது குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது.