தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருக்கோயில்களில் உரிய ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் - அறநிலையத்துறை அறிவுறுத்தல் - ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்

திருக்கோயில்களில் பக்தர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் பொதுமக்கள், உபயதாரர் உரிய ரசீது பெற்றுக்கொள்ள அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அறநிலையத்துறை
அறநிலையத்துறை

By

Published : Nov 2, 2021, 2:12 PM IST

சென்னை :இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் திருப்பணி மேற்கொள்வதற்கு தேவையான நிதியுதவி மற்றும் பொருளுதவி வழங்க பக்தர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் முன் வருகின்றனர்.

அவ்வாறு பக்தர்கள், நன்கொடையாளர்கள், பொது மக்களால் வழங்கப்படும் நிதி மற்றும் பொருள்களுக்கு சம்பந்தப்பட்ட திருக்கோயில்களில் இருந்து உரிய அச்சு ரசீது வழங்கப்படுவதில்லை என அறநிலையத்துறை அலுவலர்களுக்கு குற்றாச்சாட்டு வந்துள்ளது.

இதையடுத்து, பக்தர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் பொதுமக்கள் திருக்கோயில் திருப்பணிகளுக்கு தங்களால் வழங்கப்படும் நிதி மற்றும் பொருள்களுக்கு சம்பந்தப்பட்ட திருக்கோயில்களில் இருந்து உரிய ரசீது தவறாது பெற்றுக் கொள்ளுமாறு அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், திருக்கோயில் திருப்பணிகளுக்காக பெறப்படும் நிதி, பொருள்களுக்கு உரிய ரசீது வழங்கப்படவில்லை என அறநிலையத்துறை அலுவலர்களுக்கு தெரியவரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட திருக்கோயில் நிர்வாகிகள், திருக்கோயில் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு - நாளை ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details