நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை அகில இந்திய விஜய் மக்கள் மன்றமாக நிர்வகித்துவருகிறார். இதன் பொறுப்பாளராக புஸ்ஸி ஆனந்து என்பவர் நியமிக்கப்பட்டு இளைஞரணி, தொண்டர்கள் அணி ஆகியவற்றை ஒருங்கிணைத்து கவனித்துவருகிறார்.
இம்மன்றத்தின் அகில இந்தியச் செயலாளராக ரவிராஜா, துணைச் செயலாளராக குமார் ஆகியோர் இருந்தனர். ரவி ராஜா பல ஆண்டுகளாக மக்கள் மன்றத்தில் பொறுப்பில் இருப்பவர். அண்மையில் ரவிராஜா, குமார் இருவரையும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி பொறுப்பாளர் ஆனந்து உத்தரவிட்டுள்ளார். விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருடன் இணைந்து இருவரும் செயல்பட்டதே அவர்களது நீக்கத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.