தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'முதலமைச்சருடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார்’ : ஸ்டாலின் பதிலடி - Chief Minister K Palaniswami dared DMK president M K Stalin to debate

சென்னை: ஊழலைப் பற்றி துண்டு சீட்டு இல்லாமல் ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா என திமுக தலைவருக்கு முதலமைச்சர் சவால் விடுத்த நிலையில், அவருடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார்.

stalin
ஸ்டாலின்

By

Published : Jan 25, 2021, 11:34 PM IST

இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக திமுக சார்பில் வீரவணக்கம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக நிர்வாகிகள் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்

பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், ’இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடி உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் அனைவரும் திமுகவை சேர்ந்தவர்கள். மொழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைத்தவர் கருணாநிதி. கரோனா காலத்திலும் மக்களை சந்தித்த கட்சி திமுக தான்.

கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும் வரை தமிழ்நாட்டில் நீட் வரவில்லை. நீட் தேர்வால் ஆண்டுதோறும் மாணவர்களின் உயிரிழப்பு தொடர்ந்து வருகிறது. நீட் தேர்வை திமுக தான் கொண்டு வந்தது என்று தவறாக பரப்புரை செய்கிறார்கள். இன்னும் 4 மாதங்களில் திமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து உறுதியாக விலக்கு பெற்றே தீருவோம்.

திமுக தலைவர் ஸ்டாலின்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைக்கும் இடத்தில் வந்து நேருக்கு நேர் விவாதிக்க தயார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் ஒப்புக்காக அமைக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தை பத்து முறை ஆறுமுகசாமி ஆணையம் அழைத்தும் அவர் ஆஜராகவில்லை. ராயபுரம் தொகுதியில் திமுகவின் சாதாரண தொண்டனை நிறுத்தி கூட நாங்கள் வெற்றி பெறுவோம்’ எனக் கூறி அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஸ்டாலின் சவால் விடுத்தார்.

இதையும் படிங்க:ஊழல் குறித்து துண்டு சீட்டு இல்லாமல் விவாதிக்க தயாரா? மு க ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி சவால்

ABOUT THE AUTHOR

...view details