தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மாநில அரசாணையில் ஆளுநர் தலையிட முடியாது' மூத்த பத்திரிகையாளர் வெங்கட்ரமணன்!

சென்னை: மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டிற்கு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இவ்விவகாரம் ஆளுநர் எவ்விதத்திலும் தடை கூற முடியாது என மூத்த பத்திரிகையாளர் வெங்கட்ரமணன் நமது ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி.

மூத்த பத்திரிகையாளர் வெங்கட்ரமணன் பேட்டி
மூத்த பத்திரிகையாளர் வெங்கட்ரமணன் பேட்டி

By

Published : Oct 30, 2020, 1:01 AM IST

Updated : Oct 31, 2020, 5:18 PM IST

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் செப்டம்பர் 15 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. ஒருமனதாக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட மற்ற கட்சிகள் ஆதரவளித்தன.

இந்த மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவ்விவகாரத்தில், ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், மாநில அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் பல்வேறு கருத்துகள் எழுந்தவண்ணம் இருந்தன.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு அக்.29 ஆம் தேதி, உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிட்டது. இந்த உள் இடஒதுக்கீடு குறித்து அரசிதழில் வெளியிட தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகத் தெரிவித்திருந்தது.

இது சரியான நடவடிக்கையா? என்பன போன்ற பல கேள்விகளுக்கு நமது ஈடிவி பாரத் ஊடகத்திற்கு மூத்த பத்திரிகையாளர் வெங்கட்ரமணன் விளக்கமளித்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் வெங்கட்ரமணன் பேட்டி

கேள்வி: உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அரசாணையை அரசிதழில் வெளியிட்டால் ஆளுநர் ஒப்புதல் அவசியமா?

மூத்த பத்திரிகையாளர் : உள்இடஒதுக்கீடு அரசாணை மூலம் அமல்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ள நிலையில், இதுகுறித்து யாரும் மாநில அரசாங்கத்தை கேள்வி கேட்க முடியாது.

உள் இட ஒதுக்கீடானது சட்டத்தின் மூலம் தான் இயற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. மாநில அரசு உத்தரவின் மூலமும் செய்யலாம் என்று ஏற்கனவே தீர்ப்பு உள்ளதால், அதே கோட்பாடுதான் இதற்கும் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி: அரசு உத்தரவுக்கு ஆளுநரால் ஏதேனும் தடை ஏற்படுமா? இதற்கு அவர் முட்டுக்கட்டையாக இருப்பாரா ?

மூத்த பத்திரிகையாளர்: நேரடியாக அவரால் இதற்குள் வரமுடியாது. அரசியல் சட்டப்படி அவரிடம் இது ஒப்புதலுக்குப் போக வாய்ப்பில்லை. ஏற்கனவே ஒப்புதலுக்காக நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி இதுகுறித்து கேள்வி கேட்க முடியுமே தவிர, சட்டரீதியாக அவரால் எதுவும் செய்ய இயலாது.

இவற்றால் யாரேனும் பாதிக்கப்பட்டு நீதிமன்றம் சென்றால் இது செல்லுமா? செல்லாதா? என்ற கேள்வி எழுமே தவிர, அரசாணை மூலம் அமல்படுத்தியது தவறு என்று சொல்ல முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பிரிவு 15 (4)இன் படி, மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசாணை மூலமும் வழங்க நடவடிக்கை எடுக்க முடியும்.

இதையும் படிங்க: சிறப்பாக ஆளும் தமிழ்நாடு - பெருமிதம் பொங்க ட்வீட் செய்த முதலமைச்சர்

Last Updated : Oct 31, 2020, 5:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details