தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா மருந்து தயாரிக்க நிதி கோரிய வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஆணை - கரோனா தடுப்பு மருந்து தயாரிக்க நிதி ஒதுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள செங்கல்பட்டு மருத்துவ ஆய்வுக் கூடத்தில் கரோனா தடுப்பு மருந்து தயாரிக்க நிதி ஒதுக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய -மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

state and central
state and central

By

Published : May 23, 2020, 1:26 AM IST

கடந்த 1996ஆம் ஆண்டு செங்கல்பட்டு அருகே உள்ள அலப்பாக்கத்தில் மத்திய அரசின் எச்.எல்.எல் என்கிற மருத்துவ ஆய்வுக் கூடம் தொடங்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூடத்தில் ரேபிஸ் போன்ற பல்வேறு நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

தற்போது நாடு முழுவதும் கரோனா தொற்று, அச்சுறுத்தி வரும் நிலையில் செங்கல்பட்டு ஆய்வுக்கூடத்தில் கரோனா பரிசோதனைக் கருவிகள் மற்றும் கரோனா தடுப்பு மருந்து தயாரிக்க போதுமான நிதி, உபகரணங்கள் வழங்க மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த வழக்குரைஞர் அய்யாதுரை, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், 'அரசு மருத்துவமனைகளில் குறிப்பிட்ட அளவு மட்டுமே பரிசோதனை செய்வதால் மக்கள் தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்யும் நிலை ஏற்படுகிறது என்றும்; அங்கு கரோனா பரிசோதனைக்கு 4,500 முதல் 6,000 ரூபாய் வரை வசூலிப்படுவதால், நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

மேலும் கரோனா தடுப்பு மருந்தைத் தயாரிக்க சில தனியார் நிறுவனங்களுடன் அரசு கைகோர்த்துள்ளதாகத் தகவல் வெளியாவதாகவும், இதுபோன்ற மருந்துகளை தயாரிக்கும் பணியை தனியாரிடம் வழங்காமல் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பி.டி.ஆஷா அமர்வு, ஜூன் 3ஆம் தேதிக்குள் மத்திய- மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவு: நிர்வாகக் குழு அமைப்பு

ABOUT THE AUTHOR

...view details