தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்கள் நலப்பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை: மு.க.ஸ்டாலின் - மக்கள் நல பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை

மக்கள் நலப்பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

By

Published : Mar 22, 2022, 6:50 PM IST

சென்னை:சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 22) பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அசோக்குமார், திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படுமா? எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலப்பணியாளர்களை நியமனம் செய்தது திமுக ஆட்சி என்றும் அவர்களை வீட்டுக்கு அனுப்பியது அதிமுக எனவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும், நீதிமன்றத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு தொடுத்துள்ளதாக கூறிய அவர், வழக்கின் தீர்ப்பிற்கு பின் மக்கள் நலப்பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்கப்படும் என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை - ஓபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details