சென்னை:தமிழ்நாட்டில் நேற்று (பிப்ரவரி 19) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் சில வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட பிரச்சினைகளால் வாக்குப்பதிவு தடைபட்டது.
இந்நிலையில் நாளை (பிப்ரவரி 21) ஐந்து வார்டுகளில் உள்ள, ஏழு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை மாநகராட்சி வார்டு எண் 51, வண்ணாரப்பேட்டை வார்டு எண் 179, ஓடைக்கும்பம் பெசன்ட் நகர், திருவண்ணாமலை நகராட்சி வாக்குச்சாவடி எண் 57 M, 57 F, மதுரை திருமங்கலம் நகராட்சி வாக்குச்சாவடி எண் 17W, அரியலூர் ஜெயங்கொண்டம் நகராட்சி வாக்குச்சாவடி எண் 16M, 16F ஆகியவற்றில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். கடைசி ஒரு மணி நேரம் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:'தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும்'- முதலமைச்சர் ஸ்டாலின்