தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராயபுரத்தில் உயரும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை!

சென்னை : ராயபுரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

rayapuram crossed 13 thousand corona positive cases
rayapuram crossed 13 thousand corona positive cases

By

Published : Aug 26, 2020, 1:08 PM IST

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினமும் ஆயிரத்தைக் கடந்து வருகிறது. பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் அண்ணா நகர், கோடம்பாக்கம் போன்ற மண்டலங்களில் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

முன்னதாக, கோடம்பாக்கம், அண்ணா நகர் போன்ற மண்டலங்களில் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த நிலையில் தற்போது ராயபுரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதுவரையிலும், சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 949 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 955 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 13 ஆயிரத்து 371 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் இரண்டாயிரத்து 623 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டல வாரியான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,

கோடம்பாக்கம் - 14706 பேர்

அண்ணா நகர் - 14667 பேர்

ராயபுரம் - 13021 பேர்

தேனாம்பேட்டை - 12740 பேர்

தண்டையார்பேட்டை - 11156 பேர்

திரு.வி.க. நகர் - 9949 பேர்

அடையாறு - 9843 பேர்

அம்பத்தூர் - 8937 பேர்

வளசரவாக்கம் - 8006 பேர்

திருவொற்றியூர் - 4256 பேர்

மாதவரம் - 4518 பேர்

ஆலந்தூர் - 4575 பேர்.

பெருங்குடி - 4096 பேர்

சோழிங்கநல்லூர் - 3448 பேர்

மணலி - 2048 பேர் ஆவர்.

ABOUT THE AUTHOR

...view details