தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோயியல் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்!

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோயியல் முதன்மைப் பாடநெறி பயிற்சி வகுப்புகளை எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

rayapettai-government-hospital-oncology-training-courses-begin
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோயியல் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 12:41 PM IST

சென்னை:ராயப்பேட்டை புற்றுநோயியல் மருத்துவர்கள் குழுமம் சார்பில் தொடங்கப்படும் புற்றுநோயியல் முதன்மைப் பாடநெறி பயிற்சி வகுப்புகளை, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நாராயணசாமி இன்று தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசுகையில், இந்தியாவின் இரண்டாவது பெரிய மருத்துவப் பல்கலைக்கழகமாக விளங்கும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 100 கோடி செலவில் பிரத்யேக ஆராய்ச்சி வளாகம் நிறுவப்படும்.இதன் மூலம் பல்வேறு ஆராய்ச்சி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளபடும்.

ஆராய்ச்சி மாணவர்களின் காப்புரிமை பதிவு செய்வதற்கும் பல்கலைக்கழகம் உதவுகிறது. மேலும் தகுதியான மாணவர்களுக்கு சிறந்த மருத்துவ இதழ்களில் கட்டுரைகளை வெளியிடுவதற்கான கட்டணத்தை ஏற்றுக்கொள்வதையும் பல்கலைக்கழகம் பரிசீலித்து வருகிறது.

இராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த முதுகலை ஆராய்ச்சியாளருக்கான விருதைப் பெற்றுள்ளனர் என்பது பெருமையாக உள்ளது.

மருத்துவக் கல்லூரிகளில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஊக்குவிக்க காலாண்டுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது .மருத்துவ மாணவர்களுக்கு மேம்பட்ட பயிற்சி அளிக்க, மாதிரி அறுவை அரங்கம் போன்ற அமைப்புகள் பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட அவர் இதன் மூலம் நோயாளிகளின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும் எனத் தெரிவித்தார்.

நோயாளிகள் நலனுக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மேற்கூரை தோட்டத்தை திறந்து வைத்து, கொரோனா பேரிடரின் போது கிண்டி மருத்துவமனையில் தான் ஏற்படுத்திய மூலிகை தோட்டத்தின் நன்மைகளையும் ஏற்படுத்தியது.

கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியானது 1993 ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி நடவடிக்கைக்காக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அரசு இராயப்பேட்டை மருத்துவமனையில் உள்ள புற்றுநோயியல் துறை புற்றுநோய் சிகிச்சையில் பல ஆண்டுகால அனுபவம் கொண்டுள்ளதால் ,துறை தலைவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு சிகிச்சை தொடர்பான வழிகாட்டு நடைமுறைகள் ஏற்படுத்திட வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் முத்துசெல்வன், அரசு இராயப்பேட்டை மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் பே.நெல்லையப்பர் மற்றும் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறைத் தலைவர் எஸ்.சுப்பையா மற்றும் மருத்து மாணவர்கள் என பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:இளைஞரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த இளைஞர்கள்.. போலீஸில் அளித்த பகீர் வாக்குமூலம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details