தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத் தொகையாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொகை, அனைத்து மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இரு கல்வி நிறுவனங்களில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் கல்வி ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் என்றும், அண்மைக்காலமாக வழங்கப்படாமல் இருக்கும் நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்க வேண்டும் எனவும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.