தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இராவண கோட்டம் படப்பிடிப்பு நிறைவு - சினிமா செய்திகள்

இராவண கோட்டம் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததை அடுத்து, அப்படக் குழுவினருக்கு இயக்குநர் விக்ரம் சுகுமாரன் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இராவண கோட்டம் படப்பிடிப்பு நிறைவு
இராவண கோட்டம் படப்பிடிப்பு நிறைவு

By

Published : Sep 17, 2021, 7:51 PM IST

சென்னை: 2013ஆம் ஆண்டு 'மதயானைக் கூட்டம்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். இப்படத்தினைத் தொடர்ந்து நடிகர் சாந்தனுவை வைத்து 'இராவண கோட்டம்' என்ற புதிய படம் ஒன்றை இயக்கிவருகிறார்.

ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 2019ஆம் ஆண்டு ’இராவணக் கோட்டம்’ என்ற படத்தை இயக்கவுள்ளதாக விக்ரம் சுகுமாரன் அறிவித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகுதான் படத்தை இயக்கவுள்ளதாக அவர் அறிவித்தது, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இப்படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டதாகப் படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

இது குறித்து விக்ரம் சுகுமாரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”வெற்றிகரமாக ’இராவண கோட்டம்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது. உறுதுணையாக இருந்த அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:துல்கர் சல்மானுக்கு கோல்டன் விசா

ABOUT THE AUTHOR

...view details