தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரிசி அட்டைகளுக்கு மாறிய பயனாளிகளுக்கு  அரிசி வழங்க ரூ. 604 கோடி ஒதுக்கீடு - sugar card switching to rice card

சென்னை: சர்க்கரை ரேசன் அட்டையிலிருந்து அரிசி ரேசன் அட்டைக்கு மாறிய பயனாளிகளுக்கு, அரிசி வழங்க 604 கோடி ரூபாய் ஒதுக்கி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

RATION
RATION

By

Published : Dec 3, 2019, 7:38 PM IST

பொது விநியோகத் திட்டத்தில் 10 லட்சத்து 19 ஆயிரத்து 491 சர்க்கரை நியாய விலைக்கடை அட்டைகள் உள்ளன. இதனை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர், அட்டையை அரிசி பெறக்கூடிய அட்டைகளாக மாற்றம் செய்து தர கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து, குடும்ப அட்டைகளைத் தகுதியின் அடிப்படையில், அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது. அதன்படி 4 லட்சத்து 50 ஆயிரம் சர்க்கரை குடும்ப அட்டைகள், அரிசி அட்டைகளாக மாற்றம் செய்ய விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.

அவர்களுக்கு வழங்குவதற்காக மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரத்து 389 மெட்ரிக் டன் அரிசியைக் கூடுதலாக பெற்று வழங்கவும், அதற்காக மாதம் ஒன்றுக்கு சுமார் 50 கோடி ரூபாய் வீதம், ஆண்டுக்கு 604 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி உள்ளதாக, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: உள்ளாட்சி உங்களாட்சி 10 - துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்களின் பணிகள்

ABOUT THE AUTHOR

...view details