சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் இன்று(ஜுன்.8) முதல் நியாய விலைக்கடைகள் செயல்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் ஜுன்.7 முதல் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மளிகைக் கடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் நியாய விலைக் கடைகள் வரும் 8ஆம் தேதி முதல்(இன்று) சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் செயல்படும் என்றும்; இந்த வேலை நேரம் மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.