தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போராட்டத்தில் ஈடுபடும் ரேஷன் பணியாளர்களுக்கு 'சம்பளம் பிடித்தம்' - அரசு உத்தரவு

நியாய விலைக்கடைப் பணியாளர்கள் இன்று முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடும் நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு "No work No pay" என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

நியாய விலைக்கடை பணியாளர்கள்
நியாய விலைக்கடை பணியாளர்கள்

By

Published : Jun 7, 2022, 3:56 PM IST

சென்னை:தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று ஜூன் 7 முதல் ஜூன் 9 வரை மாநிலம் தழுவிய மூன்று நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதன்படி போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கப்பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் மூன்று நாள் வேலை நிறுத்தப்போராட்டம் அறிவித்துள்ளனர். இந்த நிலையில், இந்த மூன்று நாட்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாதவாறும், பொது விநியோகத்திட்டப்பணிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாத வண்ணம், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கத்தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்குப் பதிலாக, மாற்று பணியாளர்களை கொண்டு நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு " No work No pay" என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களின் விவரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரேஷன் கடை ஊழியர்கள் 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் - பொருள்கள் விநியோகம் பாதிப்பு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details