தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நியாய விலைக் கடை தங்குதடையின்றி செயல்படும்' - தமிழ்நாடு அரசு

சென்னை: நியாய விலைக் கடைகளில் தங்குதடையின்றி செயல்பட தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நியாய விலைக்கடை தங்குதடையின்றி செயல்படும்
நியாய விலைக்கடை தங்குதடையின்றி செயல்படும்

By

Published : Mar 23, 2020, 11:30 PM IST

கரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் நிலையில் மார்ச் 31ஆம் தேதி வரை மக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், கோயில்கள், திரையரங்குகள் ஆகியவற்றை மூட தமிழ்நாடு அரசு ஏற்கனவே உத்தரவிட்டது.

நேற்று மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட சூழ்நிலையில், கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஈரோடு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு பரிந்துரை செய்தது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளையும் வழக்கம்போல் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள்கள் தங்குதடையிள்றி கிடைக்கவும், அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் போதுமான அளவு இருப்பதை அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'காய்ச்சல் அறிகுறியுடன் புகாரளிக்க வந்தால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவும்' - டிஜிபி திரிபாதி

ABOUT THE AUTHOR

...view details