கரோனா தொற்று காரணமாக மாநகராட்சிகள், நகராட்சிகளில் இயங்கும் ரேஷன் கடைகள் காலை 7.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டும் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.
உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "மே மாதத்திற்குரிய ரேஷன் பொருள்கள் வழங்குவதற்கான டோக்கன் 2, 3 ஆகிய இரு தேதிகளில் வீடு வீடாக சென்று நியாயவிலைக் கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்பட வேண்டும். அப்போது குடும்ப அட்டைதாரர்களிடம் நேரத்தையும் தெரிவிக்க வேண்டும்.
ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே பொருள் வாங்க வரவேண்டும். டோக்கன் வழங்கும் போது பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்களான அரிசி, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு ஆகியவற்றை ஒரு தொகுப்பாக தயார் நிலையில் வைத்து வினியோகம் செய்ய வேண்டும்.