தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விலையில்லா அரிசி, கோதுமை தொடர்ந்து வழங்கப்படும்: அமைச்சர் காமராஜ் - minister kamaraj

சென்னை: தமிழ்நாட்டில் விலையில்லா அரிசி, கோதுமை தொடர்ந்து வழங்கப்படும் என பேரவையில் அமைச்சர் காமராஜ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

காமராஜ்

By

Published : Jul 3, 2019, 9:39 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ எ.வ.வேலு ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அரசின் நேரமில்லா நேரத்தின்போது பேசினார்.

இதற்கு பதிலளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ‘ஒருங்கிணைந்த பொதுவிநியோக மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு கடிதம் எழுதியது. அதில் நாடு முழுவதும் குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் எங்கு வேண்டுமானாலும் பொருட்களைப் பெற முடியும், இரண்டு குடும்ப அட்டை வைத்திருப்பவர்களை கண்டுபிடிக்க வாய்ப்பு ஏற்படுத்தவும், குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் எளிதாக பொருட்களை பெறுவதற்கு வழிவகை செய்தல் உள்ளிட்ட நோக்கத்தின் அடிப்படையில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

பெரும்பாலான மாநிலங்களில் ஆதார் அடிப்படையில் தகவல் மேம்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் மின்னணு இயந்திரம் மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். அதில் முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைதாரர்கள், அந்தியோதியா குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் செயல்படுத்த முடியும். இந்த திட்டத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பரிச்சார்த்த முறையில் நடத்தப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரு கோடியே 99 லட்சத்து 53 ஆயிரத்து 831 குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றில் 15 ஆயிரத்து 656 குடும்ப அட்டைகள் அந்தியோதியாக அட்டையாகவும், முன்னுரிமை குடும்ப அட்டைகள் 23 ஆயிரமும் உள்ளன. தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு விலையில்லா அரிசி, கோதுமை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் ஒரு நபருக்கு 12 கிலோ வீதம் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 20 கிலோ வரை அரிசி வழங்கப்படுகிறது.

மேலும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் படி 6 பேருக்கு மேல் இருந்தால் 30 கிலோ வரை அரிசி வழங்கப்படுகிறது. நமது மாநிலத்தில் அனைவருக்கும் உணவு பாதுகாப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் உள்ள சாதக பாதகங்களைக் ஆய்வு செய்து தமிழகத்தில் செயல்படுத்தப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். ஆனால் தமிழகத்தில் விலையில்லா அரிசி கோதுமை தொடர்ந்து வழங்கப்படும்’ என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details