தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேஷன் கார்டு திருத்தம் செய்ய முக்கிய அறிவிப்பு - மிஸ் பண்ணிடாதீங்க மக்களே... - குடும்ப அட்டைகளில் திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம்

குடும்ப அட்டைகளில் திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம் சென்னையில் இன்று (மே 14) நடைபெறுகிறது.

குடும்ப அட்டைகளில் திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம்  ration-card-correction-special-camp-today-in-chennai ரேஷன் கார்டு உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - மிஸ் பண்ணிடாதீங்க மக்களே...
குடும்ப அட்டைகளில் திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம் ration-card-correction-special-camp-today-in-chennai ரேஷன் கார்டு உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - மிஸ் பண்ணிடாதீங்க மக்களே...

By

Published : May 14, 2022, 9:04 AM IST

Updated : May 14, 2022, 12:40 PM IST

சென்னை:குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல், புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோக திட்டத்தின் மூலம் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, குறைகளை கேட்டுத் தீர்வு காணும் பொருட்டு மே-2022 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று (மே 14) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம்

இதில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ரேஷன் கார்டு உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றைப் பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலக பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள், இந்தச் சேவையினை பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: அஞ்சல் துறை வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டை: அமைச்சர் சக்கரபாணி

Last Updated : May 14, 2022, 12:40 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details