பிணவறையில் உடலை எலிகள் கடித்த விவகாரம்: அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவு - அரசு மருத்துவமனை பிணவறை
சென்னை: அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடலை எலிகள் கடித்து குதறிய விவகாரம் குறித்து ஊரக மருத்துவ மற்றும் சுகாதார துறையின் இயக்குநர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
![பிணவறையில் உடலை எலிகள் கடித்த விவகாரம்: அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவு மாநில மனித உரிமைகள் ஆணையம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:46:20:1601907380-tn-che-06-hrcsuomotu-script-7204624-05102020194440-0510f-1601907280-280.jpeg)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆவியூர் கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஆறுமுகம். இவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
திருகோவிலூர் அரசு மருத்துமனையில் பிணவறையில் உடற்கூராய்வு முடிந்து வைக்கப்பட்டிருந்த ஆறுமுகத்தின் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
உடலை வாங்கிய உறவினர்கள் ஆறுமுகத்தின் உடலை எலிகள் கடித்து குதறி வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பான செய்தி, நாளிதழிலில் வெளியானதை அடிப்படையாக வைத்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது.
வழக்கை விசாரித்த மனித உரிமைகள் ஆணைய பொறுப்புத் தலைவர் துரை ஜெயச்சந்திரன், ஊரக மருத்துவ மற்றும் சுகாதார துறையின் இயக்குநர், கள்ளக்குறிச்சி சுகாதார துறையின் இணை இயக்குநர் ஆகியோர் 2 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.