காவல் ஆணையரிடம் புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி வெளியான ’ராட்சசி’ திரைப்படம் அரசு பள்ளிகளை கேவலப்படுத்தும் நோக்கத்தோடும், ஆசிரியர்களை அசிங்கப்படுத்தி அவதூறு பரப்பும் விதமாகவும் உள்ளதால் படத்தை தடைசெய்ய வேண்டும் என்று கூறினார்.
'ராட்சசி' திரைப்படத்தை தடைசெய்ய வேண்டும்: காவல் ஆணையரிடம் புகார் - காவல் ஆணையரிடம் புகார்
சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்களை அவுதூறாக சித்தரித்திருக்கும் ’ராட்சசி’ திரைப்படத்தை தடைசெய்யக்கோரி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
!['ராட்சசி' திரைப்படத்தை தடைசெய்ய வேண்டும்: காவல் ஆணையரிடம் புகார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3853218-thumbnail-3x2-ratchasi.jpg)
மேலும் அவர், அரசு பள்ளியில் சேர்க்க வரும் பெற்றோர்களை உதாசீனப்படுத்தும் விதமாக சித்தரித்து உள்ளனர். அதனை தொடர்ந்து, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், பல்வேறு தொழிலில் ஈடுப்படுத்துவதாகவும் தவறான வசனங்களை சித்தரித்து பொதுமக்கள் மத்தியிலும், பெற்றோர் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக படம் எடுத்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். இதனால் படத்தை இயக்கிய கவுதம் ராஜ் உட்பட படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் படத்தை தடைசெய்யக்கோரியும் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார்.