மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆ.ராசாவின் மனைவி இரங்கல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ’’ திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான அன்புச் சகோதரர் ஆ.ராசாவின் மனைவி பரமேசுவரி மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன். திராவிட இயக்கத்தின் ஈடற்ற தளகர்த்தராக ஆ.ராசா, பொது வாழ்வில் சிகரங்களை எட்டுவதற்கு காரணமாக இருந்த இணையரை இழந்து இருக்கிறார்.
ஆ.ராசா மனைவி மறைவு - வைகோ இரங்கல்! - rasas wife passed way
சென்னை: ஆ.ராசாவின் மனைவி மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆ. ராசா மனைவி மறைவு - வைகோ இரங்கல்!
அரசியலில் சோதனைகள், வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் அனைத்திலும் ஆ.ராசா தோன்றாத் துணையாக இருந்த அவரது மனைவி மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. மனைவியை இழந்து கண்ணீர் கடலில் தவிக்கும் ஆ.ராசாவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: உணவுக்கூடம் அமைத்து மக்களின் பசிபோக்கும் சத்தீஸ்கர் காவல் துறை!