தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிஎட் தர வரிசை பட்டியல் - ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியீடு - education

சென்னை: பிஎட் பட்டப்படிப்பிற்கான தரவரிசை ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் கலந்தாய்வு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடத்தப்படும் என்றும் செயலாளர் தில்லைநாயகி தெரிவித்துள்ளார்.

தில்லைநாயகி செய்தியாளர் சந்திப்பு

By

Published : Jul 23, 2019, 4:50 PM IST

இதுகுறித்து, தமிழ்நாடு பிஎட் மாணவர் சேர்க்கை செயலாளர் தில்லைநாயகி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் ஜூலை மாதம் 19ஆம் தேதி முதல் வரும் 28ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 29ஆம் தேதிக்குள் லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரியில் அஞ்சல் மூலமும் அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடத்தப்படும். பிஎட் படிப்பில் சேர 22ஆம் தேதி மாலை வரை 2,500 மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 14 கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

தில்லைநாயகி செய்தியாளர் சந்திப்பு

2040 இடங்களுக்கு லேடி வில்லிங்டன் கல்வியியல் கல்லூரியில் நடத்தப்படும் இந்த கலந்தாய்வு, ஆகஸ்ட் 7ஆம் தேதி காலையில் சிறப்புப் பிரிவினருக்கும், மாலையில் பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்களுக்கான பிஎட் சேர்க்கைக்கான கலந்தாய்வும் நடத்தப்படும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details