சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிக வரி உதவி ஆணையர் உள்ளிட்ட 66 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு நடைபெற்று இறுதித்தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தன.
இந்தநிலையில் தற்போது குரூப்-1 பதவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலில் உள்ள அனைத்து தேர்வர்களும் வரும் 29ஆம் தேதி அன்று ஆணைக்குழு அலுவலகத்தில் காலை 9 மணிக்கு நடைபெற உள்ள கலந்தாய்வில் பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.