கரோனா ஊரடங்கு காரணமாக, மசூதிகள், தேவாலயங்கள், கோயில்கள் மூடப்பட்டுள்ளன. இவ்வேளையில் புனித ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, தற்போது இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் சிவப்பு மண்டலப் பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கும் ரம்ஜான் மாதத்தையொட்டி, இஃப்தார் உணவும், நோன்பு கஞ்சியும் வழங்க அனுமதியளிக்கக் கோரி, தமிழக காங்கிரஸ் விவசாயப் பிரிவின் மாநிலச் செயலாளர் ஷேக் ஃபரீத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.