ராமநாதபுரம் மாவட்டம், கமுதி காவடிப்பட்டியில் கூட்டுறவு கடன் சங்கம் ஒன்று இயங்கிவருகிறது. 2013-2018 ஆண்டுகளில் அக்கூட்டுறவு சங்கத்தின் தலைவரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோட்டைகண்ணன், செயலாளர் மீனாட்சி சுந்திரம், திமுக மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கம் ஆகிய மூவரும் விவசயிகளுக்கு வழங்கப்படும் பயிர் காப்பீட்டு திட்டத்தில் போலி ஆவணம் தயாரித்து சுமார் 5. 50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
ராமநாதபுரம் திமுக பிரமுகர் உட்பட 3 பேர் மீது விவசாயிகள் மோசடி புகார்! - திமுக பிரமுகர் மீது மோசடி வழக்கு
ராமநாதபுரம்: கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 5.50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அக்கூட்டறவுச் சங்கத் தலைவர், செயலாளர், மற்றும் திமுக பிரமுகர் ஒருவர் மீது டிஜிபியிடம் அம்மாவட்ட விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.
ராமநாதபுரம் விவசாயிகள்
இந்நிலையில், இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அந்த மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமிழ்நாடு டிஜிபி டி.கே. ராஜேந்திரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து புகார் அளித்தனர்.
புகாரைப் பெற்றுக் கொண்ட டிஜிபி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.