தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன் ஜாமின் வழக்கை வாபஸ் பெற்ற விஷ்ணு விஷாலின் தந்தை - சூரி வழக்கு அப்டேட்

சென்னை: ரூ. 2.70 கோடி மோசடி புகாரை தொடர்ந்து, நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த முன் ஜாமின் வழக்கை வாபஸ் பெற்றார்.

High Court
High Court

By

Published : Nov 9, 2020, 1:25 PM IST

நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த 'வீரதீர சூரன்' என்ற திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் சூரி நடித்துள்ளார். இதற்காக வழங்க வேண்டிய 40 லட்சம் ரூபாய் ஊதியத்துக்கு பதில் சிறுசேரியில் ஒருநிலத்தை தருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன், விஷ்ணு விஷால் தந்தையும், ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யுமான ரமேஷ் குடவாலா கூறியுள்ளனர்.

அந்த நிலத்துக்காக இவர்கள் இருவரும் தன்னிடம் இருந்து 2.70 கோடி ரூபாயை கூடுதலாக பெற்று மோசடி செய்துவிட்டதாக காவல் துறையில் சூரி புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை தற்போது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், காவல் துறையினர் தங்களை கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில், ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, ரமேஷ் குடவாலா, அன்புவேல்ராஜன் ஆகியோர் தொடர்ந்த முன் ஜாமின் வழக்குகளில் இருந்து, தான் விலகுவதாக தெரிவித்து வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார். வழக்குகளில் இருந்து தான் விலகியதற்கான காரணத்தை நீதிபதி குறிப்பிடவில்லை.

இதனையடுத்து இந்த முன் ஜாமின் வழக்குகள் இன்று (நவம்பர் 9) நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தன்னுடைய முன் ஜாமின் மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக ரமேஷ் குடவாலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, ரமேஷ் குடவாலாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் முன் ஜாமின் மனு தொடர்பாக நவம்பர் 26ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details