தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’11ஆம் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்’ - அரசியல் செய்திகள்

11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை மேலும் சில வாரங்களுக்கு தமிழ்நாடு அரசு நீட்டிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரியுள்ளார்.

ராமதாஸ்
ராமதாஸ் ராமதாஸ்

By

Published : Jun 9, 2021, 9:01 PM IST

இது குறித்து ட்வீட் செய்துள்ள ராமதாஸ் “தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது சரியான நடவடிக்கை. பாமக சுட்டிக்காட்டிய தவறை தமிழ்நாடு அரசு சரி செய்திருக்கிறது. மாணவர் நலன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவசரப்படாமல் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்.

9ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்புக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்படாத நிலையில் இதுவும் குழப்பத்தை ஏற்படுத்தும்.

2019-2020ஆம் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பில் நடத்தப்பட்ட எந்தெந்த தேர்வுகளின் மதிப்பெண்கள் மாணவர் சேர்க்கைக்கு கணக்கில் கொள்ளப்படும் என்பது குறித்து தெளிவான அறிவிப்பை பள்ளிக்கல்வி ஆணையரகம் வெளியிட வேண்டும்.

உயர்நிலைப் பள்ளிகளில் படித்து, மேல்நிலைப் பள்ளிகளில் 11ஆம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் அதிகாரப்பூர்வ மதிப்பெண் பட்டியல் இருக்காது. அவர்களுக்கு அதிகாரப்பூர்வ மதிப்பெண் பட்டியல் வழங்க அரசு ஆணையிட வேண்டும்.

இவை அனைத்தையும் முடித்து ஜூன் மூன்றாவது வாரத்திற்குள் வகுப்புகளைத் தொடங்குவது சாத்தியமில்லை என்பதால், 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை சில வாரங்களுக்கு தமிழ்நாடு அரசு நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details