தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகை ரம்பா சென்ற கார் விபத்து; மகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்த போது நேர்ந்த சோகம்... - actress rambha

கனடாவில் நடிகை ரம்பா சென்ற கார் விபத்திற்குள்ளானது. சிறு காயங்களுடன் அவர் மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகை ரம்பா சென்ற கார் விபத்து
நடிகை ரம்பா சென்ற கார் விபத்து

By

Published : Nov 1, 2022, 12:02 PM IST

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்பா. இவர் கனடா நாட்டின் தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கனடாவில் வசித்து வரும் ரம்பாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கனடாவில் நேற்று(அக்.31) தான் சென்ற கார் விபத்துக்கு உள்ளானதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்பா தெரிவித்துள்ளார். அதில், பள்ளியிலிருந்து குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வரும் போது கார் விபத்துக்குள்ளானதாகவும், இந்த விபத்தில் தானும் தனது குழந்தைகளும் சிறிய காயத்துடன் உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் தனது குழந்தை சாஷா மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:ஐ லவ் யூ மஞ்சிமா...! - கௌதம் கார்த்திக் ; உறுதியானது கௌதம் - மஞ்சிமா காதல்

ABOUT THE AUTHOR

...view details