தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாட்சியர் உருவப் படத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சபாநாயர் தனபால், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராமசாமி படையாட்சியார் உருவப் படம் திறப்பு! - திறப்பு
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியாரின் உருவப் படத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
Ramasami
முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்ததன் பேரில் தற்போது ராமசாமியின் உருவப் படத்தை திறந்து வைத்துள்ளார். இப்படம் சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் அமரும் 5ஆவது, 6ஆவது பாகத்துக்கு இடையே அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திருவள்ளுவர், மகாத்மா காந்தி, அம்பேத்கர், பெரியார், காமராசர், ராஜாஜி, அண்ணா, எம்.ஜி.ஆர், காயிதே மில்லத், முத்துராமலிங்க தேவர், ஜெயலலிதா திருவுருவ படங்கள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.