ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆர்.எஸ். மடை ஒன்றியத்தில் வாக்களிக்கவந்த நிறைமாத கர்பிணி கீர்த்திகா என்பவர் வயிற்று வலி காரணமாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, மருத்துவமனையில் மருத்துவர்கள் யாருமில்லாத நிலையில், கர்ப்பிணிக்கு அங்கு பணியில் இருந்த செவிலியர்கள் பிரசவம் பார்த்தனர் (மருத்துவர் தாமதமாக வந்தார்). ஆனால், குழந்தை இறந்து பிறந்தது. அதன்பின்னர் கீர்த்திகாவும் உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவர் தாமதமாக வந்ததால், தாயையும் சேயையும் காப்பற்ற முடியவில்லை எனப் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக வெளியான செய்தி அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.