தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமகோபாலன் மறைவிற்கு ஆளுநர் இரங்கல்! - governor condolence

சென்னை : தமிழ்நாடு இந்து முன்னணியின் நிறுவனரும் தலைவருமான ராமகோபாலன் மறைவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராமகோபாலன் மறைவிற்கு ஆளுநர் இரங்கல்!
ராமகோபாலன் மறைவிற்கு ஆளுநர் இரங்கல்!

By

Published : Sep 30, 2020, 10:09 PM IST

தமிழ்நாடு இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலன் இன்று (செப்.30) உயிரிழந்தார். இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இது தொடர்பாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில், "தமிழ்நாடு இந்து முன்னணியின் நிறுவனரும் தலைவருமான ராமகோபாலன் மறைந்த செய்தி கேட்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.

’வீரத்துறவி’ என அழைக்கப்பட்ட அவர், தனது வாழ்நாள் முழுவதையும் தமிழ்நாடு மக்களின் நலனுக்காக அர்ப்பணித்துள்ளார். அவரின் மறைவு இந்து முன்னணியின் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவரது ஆன்மா சாந்தி அடையவும் பிரார்த்தனை செய்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details