இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அந்த 7 தமிழர்களையும், முன் விடுதலை செய்திட வேண்டும் என்கிற கோரிக்கை தமிழகம் முழுவதும் எழுந்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு சிறப்பு தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால், ஜெயலலிதா சிறை சென்றதை கண்டித்து 3 மாணவிகளை உயிருடன் எரித்த வழக்கில் கைதான 3 அதிமுக நிர்வாகிகளை முன் விடுதலை செய்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இவர்கள் 7 பேரை விடுதலை செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.